
posted 26th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
புதிய நியமனம்
கல்முனை வலயத்தில் இரு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளுக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை கோட்டத்தின் கோட்டக் கல்விப்பணிப்பாளராக உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். றியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக முன்னாள் கல்முனை கோட்டக்கல்விப்பணிப்பாளர் நஸ்மியா சனூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்குமான நியமனக்கடிதங்களை கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ் சஹதுல் நஜீம் வழங்கி வைத்தார்.
நேற்று (25) அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)