
posted 16th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பஸ் அன்பளிப்பு செய்தார் சஜித் பிரேமதாஸ
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் வேண்டுகோளுக்கு அமைவாக சக்வல - பிரபஞ்சம் வேலை திட்டத்தின் கீழ் 75ஆவது பஸ் வண்டியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பஸ் வண்டியை சஜித் பிரேமதாஸ சம்மாந்துறை ஹிஜ்ரா பெரிய பள்ளிவாசல் சந்தியிலிருந்து செலுத்திக் கொண்டு வந்து குறித்த பாடசாலை முன்றலில் நிறுத்தினார்.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜவுக்கு முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் அநோக வரவேற்பளித்தனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தயின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன்அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர் உட்பட கல்வி அதிகாரிகள், பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)