
posted 29th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்
மனைவியைக் கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி விபத்தில் காயமடைந்தவர் பலி
(ஏ.எல்.எம்.சலீம்)
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புஹாரி நுஜைக் அஹமட் (வயது 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (24) மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது - 25) உயிரிழந்துள்ளதுடன், புஹாரி நுஸைக் அஹமட் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பயன்தரு மரங்கள் எரிந்து நாசம்
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பில் மண்முனைப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் கடற்கரையை அண்மித்துள்ள தோட்டங்களில் திடீரென தீ பரவியதால் பயன்தரு மரங்கள் பல எரிந்து நாசமாகின.
பற்றியெரிந்த தீயை அணைப்பதற்கு விவசாயிகள் பெரு முயற்சி எடுத்தபோதும் அது பலனளிக்கவில்லை. எனினும், மட்டக்களப்பு மாநகர தீயணைப்பு பிரிவு தீ பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது.
மனித நடவடிக்கையாலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார் இது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்!
(எஸ் தில்லைநாதன்)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்த பக்தர் ஒருவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம், நாவலர் வீதியை சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்தவர் வழக்கமாக ஒவ்வொரு வருடமும் திருவிழா காலத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறார். திருவிழா தொடங்கிய நாள்முதல் வழமை போன்று அவர் இந்த வருடமும் தினமும் அங்கப் பிரதட்சணம் செய்து வந்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)