பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பலவகைச் செய்தித் துணுக்குகள்

பலவகைச் செய்தித் துணுக்குகள்

பெருந்தொகை கஞ்சா நெடுந்தீவுக் கடலில் மீட்பு!

(எஸ் தில்லைநாதன்)

27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

நெடுந்தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த பொதிகளில் கேரள கஞ்சா இருந்தமையை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

22 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சா தொகை 80 கிலோவுக்கும் அதிகம் என எடை மதிப்பிடப்பட்டுள்ளது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

வடமராட்சி கொற்றாவத்தை விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு

(எஸ் தில்லைநாதன்)

யாழ்.வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (24) மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (வயது 14) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த சில வருடங்களாக கொற்றவத்தை பகுதியில் வசிக்கும் அஜந்தன் (வயது 21) என்பவர் கை மற்றும் கால் முறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சையிக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போது இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சையிக்கிளும் டிப்பர் பவருக்குள் சிக்குண்டு தீ பிடித்தும் எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

(எஸ் தில்லைநாதன்)

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் புதன் (23) வீட்டில் பணம் கேட்டு சண்டையிட்டதுடன், தண்ணீர் இறைக்கும் மோட்டாரை கிணற்றினுள் தூக்கி வீயுள்ளார். அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று (24) வியாழன்மதியம் வீட்டிற்கு அருகேயுள்ள காணி ஒன்றில் உள்ள விளாத்தி மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் போதைக்கு அடிமையானவர் என அறியமுடிகிறது.

அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அருளானந்தம் லக்ஸன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)