பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பலவகைச் செய்தித் துணுக்குகள்

9 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

(எஸ் தில்லைநாதன்)

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 9 மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஜூலை 25ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 2 படகுகளுடன் 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்திய மாநில மற்றும் மத்திய அரசின் நடவடிக்கையினால் கைதான மீனவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்கள் நேற்று (18) வெள்ளிகாலை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு அவர்களை தமிழ்நாடு மீனவளத்துறை அதிகாரிகள் வரவேற்றதுடன், குறித்த மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

சந்தேக நபர் கைது!

(ஏ.எல்.எம்.சலீம்)

மீன்பிடித்துறையில் மீனவர்களால் பிடிக்கத் தடை செய்யப்பட்ட சவுக்கு சுறா (கசமோறா) மீன்கள் 33 கிலோவை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கடற்படையினர் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தனது தவறை ஒப்புக்கொண்ட சந்தேக நபருக்கு திருகோணமலை பிரதான நீதிபதி இஸ்மாயில் பயாஸ் றஸாக் 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

சாம்பல் தீவு,சல்லிய பிரதேசத்திலுள்ள மீன் வாடியில் வைத்தே மீன்களுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)