பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பலவகைச் செய்தித் துணுக்குகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் திடீர் விஜயம்

எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு இன்று திங்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் மேற்கொண்டார்.
குறித்த அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்தவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது குறித்த அலுவலகத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலும் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கௌசல்யா நவரத்தினம் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் குறித்த அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி தற்பரன், யாழ்.பிராந்திய இணைப்பாளர் செல்வகுமார், ஜனாதிபதியின் மேலதிக இணைப்பாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விபத்தில் சிக்கிய இளைஞன் சிச்சை பலனின்றி சாவு

எஸ் தில்லைநாதன்

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

துன்னாலை மத்தி, கோயில்கடவையைச் சேர்ந்த சங்கர் சஞ்ஜீவன் (வயது-20) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த முதலாம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் பழக முயன்றபோது மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. தலைக்கவசம் அணியாத நிலையில் படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று (ஒக்.7) காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார்.

காங்கேசன்துறையில் கஞ்சா கடத்தியவர் கைது!

எஸ் தில்லைநாதன்

காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன், ஒருவர் கைது செய்யப்பட்டநிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.

கடற்படைக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் கையளித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளத்துடன், தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)