
posted 10th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நீதிபதி பிரபாகரனை வரவேற்கும் நிகழ்வு
கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதி ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் நிகழ்வு கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ. றைசுல் ஹாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம். முஹம்மட் றியால், கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதில் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)