
posted 21st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நல்லூர் கந்தன் திருவிழாவுக்கான கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை கொயேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
இதன்படி கல்வியங்காட்டில் அமைந்துள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் பரம்பரையை சேர்ந்தவரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் நடைபெற்று மங்கள வாத்தியம் சகிதம் கல்வியங்காடு வேல் மடம் முருகன் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து வேல் மடம் முருகன் ஆலயத்தில் விசேட பூசகள் நடைபெற்று அங்கிருந்து கொடிச்சீலை சிறிய இரதத்தில் பருத்தித்துறை வீதி ஊடாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)