
posted 16th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தேசிய ரீதியில் சாதனை படைத்த சம்மாந்துறை மாணவி
கல்வி அமைச்சு நடத்திய சர்வதேச ஒலிம்பியாட் கணித போட்டியில் தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய மாணவி செல்வி சிவரூபன் ஜினோதிகா தங்கப் பதக்கம் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற தேசிய போட்டியில் யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயம் வித்தியாலய மாணவன் ஆர். ஆருஜன் 50 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்தார்.
45 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய மாணவி செல்வி சிவரூபன் ஜினோதிகா தங்கப் பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தில் மகத்தான சாதனை படைத்துள்ளார்.
இது சம்மாந்துறை வலயத்தில் சர்வதேச ஓலிம்பியாட் சரித்திரத்தில் முதல் சாதனையாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)