தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்து

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்து

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் உயர் கல்வித் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் உயர் கல்வி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற துருக்கி கிர்னே அமெரிக்க பல்கலைக்கழகத்தோடு ஒன்றிணைந்துள்ள மெட்றோபொலிட்டன் கல்லூரி நடத்திய சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

நாட்டின் உயர் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் அங்கத்தவரில் ஒருவராக என்னையும் கடந்த ஆண்டு நியமித்திருந்தார்கள். ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி, உயர்கல்வி ஆகியவற்றின் மீது எங்களது கவனம் திரும்பியிருந்தது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தேசிய கல்வி ஆணைக்குழுவினர், தேசிய கல்வி நிறுவனத்தினர் உட்பட உயர்கல்வி துறையோடு சம்பந்தப்பட்ட பல தரப்பினரையும் அழைத்து நாங்கள் நிலைமையை நன்றாக ஆராய்ந்தோம். அதன் அடிப்படையில் எங்களது முடிவுகளை நாங்கள் முழுமைப் படுத்தி, விதந்துரைகளை முன்வைத்துள்ளோம். அவற்றை இனி பொது மக்கள் அறியக்கூடியதாக இருக்கும்.

பல்கலைக் கழக கற்கை நெறிகளின் தர நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உத்தரவாதம், அங்கீகாரம் என்பனவும் உறுதிப்படுத்தப்பட வேண்டியவையாகும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒரு கண்டிப்பான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றது. பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் நிருவாகச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சுயமாக தனித்து செயல்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பதும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதும் எமது அபிப்பிராயமாகும்.

சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தும், சுதந்திரத்துக்கு பின்னரும் இலங்கை கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது. இலங்கை பலவற்றில் முன்னிலையில் திகழ்கின்றது. சர்வஜன வாக்கெடுப்பு, பெண்களுக்கான வாக்கெடுப்பு, இலவசக் கல்வி போன்றவற்றில் பிராந்தியத்தில் இலங்கை முன்னிலையில் இருந்துள்ளது.

ஜனாதிபதியும் அவரது அண்மைய பாராளுமன்ற உரையில் மாகாண சபைகளும் கூட பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு முன்வர வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து இருக்கிறார். இவ்வாறான கருத்திட்டங்கள் உள்ளன.

பல்கலைக்கழக கல்வி முறை அரசியலில் இப்பொழுது ஒரு பேச்சுப் பொருளாக மாறி இருக்கிறது. வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரவேசம் இலங்கையின் இலவச கல்வி திட்டத்திற்கு பாதிப்பை உண்டு பண்ணும் என்ற ஒரு விதமான அச்சத்தையும், எதிர்ப்பையும் ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள். அதில் உண்மையில்லை என்றார்.

மெற்றோபொலிடன் கல்லூரியின் தலைவர் கல்முனை முன்னாள் நகர பிதா கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். அத்துடன் வட சைப்பிரஸில் அமைந்துள்ள, துருக்கி கிர்னே அமெரிக்க பல்கலைக்கழகத்தின் உப தலைவர் பேராசிரியர் இஸ்மத் இஸினே மற்றும் பிரபல தொழில் அதிபரும், தெரண மற்றும் லிபர்டி ஊடக வலையமைப்புகளின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.

தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்து

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)