தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆளுநருடன் சந்திப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆளுநருடன் சந்திப்பு

தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை கிழக்கு மாகாண ஆளுனரின் திருகோணாமலை அலுவலகத்தில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாள அனில், கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ எம்.எச். உதயகுமார, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக திட்டப் பணிப்பாளர் பாயிஸ், தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் சிமாஸ் மௌலானா, செயலாளர் எம்.எஸ்.பைறுஸ் உட்பட நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.

இதன்போது பின்வரும் கோரிக்கைகள் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன.

கல்முனை கதுருவெல வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ் ஒன்று ஜூலை 7ஆம் திகதி மன்னம்பிட்டியில் விபத்தை ஏற்படுத்தி அப்பாவிப் பொதுமக்கள் 11பேர் பலியானதுடன் 40 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது சம்மந்தமாக கிழக்கு மாகாண ஆளுநரினால் விசேட குழு நியமிக்கப்பட்டு இது தொடர்பான உண்மைத்தன்மை வெளியிடுதல்.

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முறையற்ற முறையில் வழங்கப்பட்ட 13 சொகுசு பஸ்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் கல்முனை மேல் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டன. இந்த விடயமாக கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் கொழும்பு மேன்முறையிட்டு நீதிமன்றத்தினால் வழக்கு தொடர்ந்துள்ளமை தொடர்பான விடயம்.

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் இடம்பெற்று வந்த நிதி மோசடி மற்றும் ஊழல்கள் சம்மந்தமான ஆதாரங்கள் வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்காமை, கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முறையற்ற முறையில் வழங்கப்பட்ட பஸ் அனுமதிப்பத்திரங்கள் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரால் இடை நிறுத்தப்பட்ட பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் சென்ற 2023.07.23ஆம் திகதி தவறான முறையில் நீடித்து கொடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் சங்கம் கோரிக்கை விடுப்பதனால் தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் சங்கத்தை கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் தொடர்ச்சியாக பழிவாங்கும் செயல்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.

மேற்படி விடயங்களை கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆளுநருடன் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)