
posted 12th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜப்பினிய அரசினால் பாடசாலைக்கு புதிய கட்டிடம் கையளிப்பு
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 02 அ.த.க பாடசலைக்கு ஜப்பானிய மற்றும் இலங்கை நட்புறவின் அடையாளமாக ஜப்பானிய மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய கட்டிடத்தொகுதி வெள்ளிக்கிழமை (11) கையளிக்கப்பட்டது.
17.6 மில்லியன் செலவின் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குறித்த கட்டடம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜப்பன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுசி கிடாக்கி அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து கையளித்தார்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை சமூகம் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)