
posted 5th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
செம்மலை நீராவியடி பிள்ளையார் பொங்கல் திருவிழா
பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமானது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மட்பாண்டம் எடுத்துவரப்பட்டு திருவிழா நடைபெற்றது.
பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலய பூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும், பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இத் திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (05) சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பரிகலம் வழிவிடுதல் நிகழ்வு நடைபெற்று பொங்கல் திருவிழா நிறைவுறும்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிள்ளையார் ஆலயத்துக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)