
posted 12th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சூழலியல் செயற்பாட்டாளருக்கு கௌரவம்
மிகவும் இளவயதுடைய சூழலியல் செயற்பாட்டாளரும், சம்மாந்துறை அல் - அர்சத் மகா வித்தியாலய 7ஆம் தர மாணவியுமான மின்மினிமின்ஹாவை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பாராட்டி கௌரவித்துள்ளது.
ஸ்கொட்லாந்து தமிழ்ச் சங்கம் நடத்திய சர்வதெச பேச்சுப்போட்டியில் 2ஆம் இடத்தையும், கொழும்பு டி.எஸ். சேனனாயக்க கல்லூரி தேசிய ரீதியில் நடத்திய அறிவிப்பாளர் போட்டியில் 3ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ள மாணவி மின்மினிமின்ஹாவை ஊக்குவிக்கும் வண்ணம் மேற்படி கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிந்தாவூர் ரிலெக்ஸ் கார்டன் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் குடும்ப ஒன்று கூடலின் போது இந்த மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் ஓய்வு பெற்ற பதிவு வைத்திய அதிகாரி டாக்டர். திருமதி. ஜே. சலீம் மாணவி மின்ஹாவுக்கு பொன்னாடை போர்த்தியதுடன், ஊடகவியலாளர் மீரா. அலிரஜாயின் பாரியார் ஹபீலா அலிரஜாய் பணப்பரிசிலும் வழங்கி கௌரவித்தனர்.
சம்மேளனத் தலைவலர் கலாபூஷணம் மீரா.எஸ். இஸடீன் உட்பட சம்மேளன உறுப்பினர்களான ஊடகவியலாளர்கள் பலரும் சாதனை மாணவிக்குப் பாராட்டுக்களுடனான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மாணவி மின்ஹாவின் சாதனை உரையும் இடம்பெற்றது.
ஊடகவியலாளர், இலக்கியவாதி ஜலீல் ஜீயின் புதல்வியான மின்மினிமின்ஹா, காலநிலை மாற்றத்துடன் தொடர்பான விழிப்புணர்வு உரையைப் பத்துலட்சம் பேருக்கு நிகழ்த்தவும், பசுமை மீட்சிக்காய் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடும் செயற்திட்டமொன்றையும் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)