
posted 3rd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சுயதொழில் விற்பனைக் கண்காட்சி
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனையும் கண்காட்சியும் உதவி பிரதேச செயலாளர் ல.பிரசாந்தன் தலைமையில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் பொருட்களை கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இக்கண்காட்சி வருடம் தோறும் மூன்று அல்லது நான்கு தடவைகள் நடைபெறுவது வழக்கம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)