
posted 20th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சீருடை அறிமுக நிகழ்வு
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சீருடை அறிமுக நிகழ்வு சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது கிளையின் தலைவத் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். சலீம் தலைமையிலும் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான ஏ.எஸ். அஸ்வரின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளிர், பேரவையின் மூத்த உலமா அஷ்செய்க் யூ.எல். அஸ்ரப் ஆகியோருடன் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான யூ.கே. காலித்தீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
சீருடைக்கான அனுசரனையினை தனது மரணித்த தாயின் ஞாபகர்த்தமாக பொறியியளாளர் அலியார் சௌஃபர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)