
posted 31st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சாய்ந்தமருதில் ஸகாத் வழங்கும் நிகழ்வு
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் இவ்வாண்டும் பைத்துஸ்ஸகாத் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீமின் தலைமையில், உதவித் தலைவர் மௌலவி ஐ.எல்.எம். ரஃபி (ஹிழ்ரி)யின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர், பொருளாளர் ஏ.ஏ. சலீம் மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், சொப்டா நிறுவன பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எம். எம். நஸீர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்.எம். றிஸ்மீர், பைத்துஸ் ஸகாத் பணிப்பாளர் எம்.ஐ.எம். அஷ்ரப், பைத்துஸ் ஸகாத் செயலாளர் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் யூ.எல்.எம். ஹனீபா, பொருளாளர் பிரதேச செயலக ஓய்வுபெற்ற நிதி உதவியாளர் யூ.எல்.எம். ஹனீபா, உப செயலாளர் எம்.சி.எம். அன்வர், பைத்துஸ் ஸகாத்தில் பணிபுரியும் ஏ.ஏ.சமட் உட்பட பைத்துஸ் ஸகாத் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 131 பயனாளிகளுக்கு இதன்போது பணமாகவும், தொழில் செய்வதற்கான உபகரணங்களும், நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)