சஜித் ஒரு குழப்பவாதி

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சஜித் ஒரு குழப்பவாதி

சஜித் ஒரு குழப்பவாதி

சஜித் ஒரு குழப்பவாதி. கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, நாட்டை முன்னேற்றும் வல்லமைமிக்க ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்ததே அவர் புரிந்த சாதனையாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எவ்வித திட்டமும் சஜித் பிரேமதாசவிடம் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அரகலய போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளிலேயே அதிகம் ஈடுபடுவார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ஒற்றுமைக்காக பாடுபடுகின்ற ஒரு தலைவராக திகழ்கிறார். ஏனென்றால், அவருக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிடையாது. இன்று பல தரப்பினையும் ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறார்.

சஜித் ஒரு குழப்பவாதி

அதனால்தான் அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்ற பொருளாதாரத்தை மீட்டெடுத்து, நாட்டை கட்டியெழுப்புகின்ற திட்டங்களுடன் முழுமூச்சாக செயற்படுகின்ற ஜனாதிபதி ரணிலுடன் இன்று உலக நாடுகளின் தலைவர்கள் கைகோர்த்துள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு நாடு இருந்த நிலைமையை மீட்டிப்பாருங்கள். மக்கள் நடுத்தெருக்களில் வரிசைகளில் அல்லல்பட்டனர். சிலர் தெருக்களிலேயே மரணித்தனர். மக்கள் நிம்மதியிழந்து, துன்பப்பட்டனர். உரிய தருணத்தில் ஜனாதிபதி ரணில் துணிச்சலுடன் முன்வந்து, நாட்டை பொறுப்பேற்றிருக்கா விட்டால் என்ன நடந்திருக்கும்? நிலைமை இன்னும் படுமோசமான நிலைக்கு சென்றிருக்கும்.

எமது தேசமும், சர்வதேசமும் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கிறார். அவர் ஜனாதிபதியாக நீடிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ உள்ளுராட்சி தேர்தலோ அவசியமில்லை. இவற்றால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். அதனை அவர் வெற்றிகரமாக முன்கொண்டு செல்கிறார். ஆகையினால், ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு அவரது இருப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

அரகலய போராட்டக்காரர்கள் வேண்டி நிற்கின்ற System Change - முறைமை மாற்றம் தொடர்பிலான முன்மொழிவுகள், கோரிக்கைகள் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படும் என்று பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர்களான மயோன் முஸ்தபா, அனோமா கமகே, ஐ.தே.க. கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஏ.எம். ஜெமீல் உள்ளிட்டோரும் உரை நிகழ்த்தினர்.

சஜித் ஒரு குழப்பவாதி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)