கல்முனையில் இலவச வைத்திய சிகிச்சை முகாம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனையில் இலவச வைத்திய சிகிச்சை முகாம்

இலங்கை மார்க்கய சகோரத்துவ (ஐக்கிய) அமைப்பும், கொழும்பு மெகா சிற்றி லயன்ஸ் கழகமும் இணைந்து கல்முனையில் இலவச வைத்திய சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தியது,

கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் கல்முனை பரலோகவாசல் தேவ சபை என்பன இணைந்து இலவச சிகிச்சை முகாமுக்கான சிறப்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

கல்முனை பரலோக வாசல் தேவ சபை இளைஞர் மண்டபத்தில் வறிய மக்களுக்குப் பெரும் பயனளிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த இலவச வைத்திய சிகிச்சை முகாமில் தென்கொரியாவைச் சேர்ந்த வைத்தியக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முகாமுக்கான சிறந்த ஏற்பாடுகளை கல்முனை பரலோக வாசல்தேவ சபையின் வணக்கத்துக்குரிய போதகர் ஏ. கிருபைராஜா, கல்முனை நகர லயன்ஸ் கழகத் தலைவர் பொறியியலாளர் லயன். எஸ். சுதர்சன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

வண போதகர். ஏ. கிருபைராஜா தலைமையில் நடைபெற்ற சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வில்,

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம். றிபாஸ், பிரதிப்பணிப்பாளர் டாக்டர். எம்.பி. அப்துல் வாஜித், கொழும்பு மெகா சிற்றி லயன்ஸ் கழகத் தலைவர் லயன். சந்திர குலவன்ஸ, கல்முனை நகர லயன்ஸ் கழகத்தலைவர் பொறியியலாளர் லயன். எஸ். சுதர்சன் உட்பட தென் கொரிய முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் சுகாதாரத்துறையில் நெருக்கடிகள் ஏற்பட்டு, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவும் இக்கால கட்டத்தில் இடம்பெற்ற இந்த இலவச வைத்திய சிகிச்சை முகாம் பெரும் வரப்பிரகசாதமாக அமைந்ததெனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

கல்முனையில் இலவச வைத்திய சிகிச்சை முகாம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)