
posted 30th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கலந்துரையாடல்
தமிழரசுக் கட்சியின் மாவட்டக்கிளை தெரிவுக்கான கலந்துரையாடல் இன்று (30) புதன் கிழமை கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன், முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 2023 ம் ஆண்டுக்கானா நிர்வாகத் தெரிவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)