ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளியில் இடம்பெற்ற சிறார்களின் சிறுவர் சந்தை

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளியில் இடம்பெற்ற சிறார்களின் சிறுவர் சந்தை

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளிச் சிறார்களின் சிறுவர் சந்தை நிகழ்வு மேற்படி முன்பள்ளிச் சமூகத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை (16.08.2023) காலை 09 மணி முதல் மேற்படி முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியை திருமதி. புஷ்பராணி ரஜிதரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்தச் சிறுவர் சந்தை நிகழ்வில் இலங்கை வங்கியின் மல்லாகம் கிளை முகாமையாளர் செ. பார்த்தீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முன்பள்ளிச் சிறார்களிடம் மறைந்து கிடக்கும் உள்ளார்ந்த திறன்களை வெளிக் கொண்டு வரும் நோக்கில் பதினான்காவது தடவையாக இந்தச் சிறுவர் சந்தை நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

சிறுவர் சந்தை நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் சிறுவர் சந்தை சிறப்பாக இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.

முன்பள்ளிச் சிறார்களின் உறவுகள், ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பொருட்களின் கொள்வனவில் ஈடுபட்டனர்.

நிகழ்வின் இறுதியில் இலங்கை வங்கி மல்லாகம் கிளையினரின் அனுசரணையில் சிறுவர் சந்தையில் பங்கேற்ற அனைத்துச் சிறார்களுக்கும் வங்கி முகாமையாளர் பார்த்தீபன் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி வைத்தார்.

ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளியில் இடம்பெற்ற சிறார்களின் சிறுவர் சந்தை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)