
posted 3rd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஊர்மக்களால் சுற்றிவளைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார விடுதி அப்பிரதேச மக்களால் சுற்றிவைக்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பின் போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இருபெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக உப்புவெளி பொலிஸார் கூறினர்.
குறித்த இரு பெண்களும் 25 மற்றும் 30 வயதினர் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பெண்களையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)