
posted 24th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் உதவி
இன்றையதினம் (24.8.2023) வைத்தியர் வாணி பிறேம்ஜித் ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன், தொண்டு நிறுவனமாகிய வன்னி ஹோப் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், தற்போதைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டும் அவரது தனிப்பட்ட நிதியில் இத்தகைய மருந்துகள் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த கையளிப்பு நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தினர், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)