
posted 6th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஊடகவியலாளர் குடும்ப ஒன்று கூடல்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த குடும்ப ஒன்று கூடலும், பொதுச் சபைக் கூட்டமும், நிந்தவூர் ரிலெக்ஸ் கார்டன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
வருடாந்த ஒன்று கூடல் ஏற்பாடுக் குழுவின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எம். இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசிக்கும் சம்மேளன ஸ்தாபக உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மீரா. அலிரஜாய் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் மீரா. எஸ். இஸடீன், சம்மேளன ஆலோசகரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றியதுடன், சம்மேளன செயலாளர் எம்.எம்.ஏ. சமட் நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்.
நிகழ்வின் விசேட அம்சமாக சிறப்ப அதிதியும், ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பருவமான ஊடகவியலாளர் மீரா அலிரஜாய்வின் அனுசரணையில் சம்மேளன உறுப்பினர்களுக்கான சீருடைகள் (ரிசேர்ட்) வழங்கப்பட்டதுடன்.
உறுப்பினர்களுக்கான சம்மேளன ஊடக அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை நீண்டகாலமாக சம்மேளன வளர்ச்சிக்குப் பங்களிப்புக்களை வழங்கிவரும், ஊடகவியலாளர் மீரா அலிரஜாய் நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை, அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த ஊடக குடும்பத்தைச் சேர்ந்த மீரா ரப்ஸான் - பாத்திமா நுஸ்ரத் தம்பதியினருக்கும் வாழ்த்து மடல் மற்றும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த ஒன்று கூடல் நிகழ்வில் சம்மேளன உறுப்பினர்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டதுடன் குதூகல போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)