இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் -  சிவஞானம்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் - சிவஞானம்

இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் -  சிவஞானம்

அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்றைய தினம் (23) தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு விடயங்கள் பேசப்பட்டது. பாராளுமன்றத்திற்கு இந்த விடயங்களை பாரப்படுத்த வேண்டிய தேவையில்லை. அரசியலமைப்பில் இருக்கின்ற விடயங்களை ஜனாதிபதி அமுல்படுத்த முடியும். ஆனால், அவரே 13ஆம் திருத்தத்தை நான் அமல் படுத்துவேன் என்று சொல்லுகிரார். அப்படி இல்லை என்று எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமையை இல்லாது செய்ய சொல்லுகின்றார்கள். இதைப் பார்க்கும்போது அவரே மறைமுகமாக இதனை சொல்லி இருக்கின்றார் என தெரிகிறது.

வரி விதிப்பை பொறுத்தவரை கோட்டபாயவிற்கும் தவறான ஆலோசனை வழங்கப்பட்டு தான் பொருளாதாரப் பிரச்சினை நாட்டுக்கு வந்தது. தற்போது இவர்களும் கல்விமான்கள், வைத்தியர்கள் போன்றோருக்கு புதிதாக வரி விதிப்பதன் மூலம் அவர்கள் வெளிநாடு போகின்ற போது மக்களையே பாதிக்கப் போகிறது. ஆனபடியால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த விடயங்களை இனி ஐக்கிய நாடுகள் மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்றைய தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

இதன் போது தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க தூதுவர் கேட்டு அறிந்து கொண்டதுடன் தமிழ் மக்களின் அன்றாடம் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் அரசியல் தலைவர்களினால் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பௌத்தமயமாக்கல், காணி அபகரிப்பு, அரசாங்கத்தின் பிழையான வரிக்கொள்கை மூலம் வைத்தியர்கள், புத்தியீவிகள் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் எனவும் அமெரிக்க தூதுவருக்கு, தமிழ் தலைவர் களினால் இதன் போது சொல்லப்பட்டது.

இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் -  சிவஞானம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)