அம்பாறையில் ஐஸ் மழை

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறையில் ஐஸ் மழை

அம்பாறை, பதியதலாவ பிரதேசத்தில் ஐஸ் கட்டியுடன் வீசிய பலத்த காற்றினால் பாரிய மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் வீடுகளின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன.

எதிர்பாராத விதமாக திடீரென்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பதியத்தலாவ முழு பிரதேச மக்களும் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அம்பாறை- பதியத்தலாவ வீதி, மட்டக்களப்பு - பதுளை வீதி, கண்டி வீதி போன்ற இடங்களில் பாரிய மரங்கள் வீழ்ந்ததால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. தூர இடங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தியதாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பதியத்தலாவ கனிஷ்ட வித்தியாலய இரண்டு மாடிக் கட்டடத்தில் மரமொன்று முறிந்து விழுந்ததால் கட்டிடம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அருகிலிருந்த தற்காலிக வகுப்பறை தொகுதியின் கூரை பலத்த காற்றினால் தூர வீசப்பட்டுள்ளது.

இதே வேளையில் மின்சாரமும் தடைப்பட்டிருந்ததால் பிரதேசமெங்கும் இருளில் மூழ்கியிருந்ததாகவும், மகா ஓயா இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் அம்பாறையிலிருந்து மேலதிக ஊழியர்களை வரவழைத்து மின்சார வினியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை பதியத்தலாவ பிரதேச செயலகம் மேற்கொண்டிருந்ததாக பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தெரிவித்தார்.

அம்பாறையில் ஐஸ் மழை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)