
posted 26th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அதாஉல்லா நியமனம்
தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், கிண்ணியா, குச்சவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வியாழனன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராகவும் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்ற நிலையிலேயே இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய அதாஉல்லா, ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)