
posted 15th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
95ஆயிரம் ரூபா ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!
வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று முன் தினம் ஞாயிறு இடம்பெற்ற விசேட பூசையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று ஏலத்தில் 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் விசேஷ நாட்களில் நடக்கும் பூசைக்கு பின், பூசைக்கு வழங்கப்படும் பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏலத்தில் விற்கப்படும். எனினும் , அதிக விலைக்கு மாம்பழம் ஒன்று விற்பனையானது இதுவே முதல் முறை ஆகும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
விடுமுறையை கழிப்பதற்காக லண்டனில் இருந்து வவுனியா வந்துள்ள கோவிலை அண்மித்த வீடொன்றில் வசிக்கும் ஒருவர் இந்த மாம்பழத்தை கொள்வனவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)