
posted 17th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பொலிஸ்காரர் சிக்கினார்
கடமைக்காக வழங்கிய ரி-56 ரக துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டார்.
ஹொரவப்பொத்தான, வாஹல்கட பொலிஸ் பிரிவில் ரி-56 ரக துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பொலிஸ் எல்லையை தாண்டி அந்த பொலிஸ் உத்தியோகத்தர் எடுத்துச் சென்றுள்ளார்.
ஹொரவப்பொத்தான முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த யோதகே சுனில்சாந்த (வயது-58) என்பவரே கைதானார்.
கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாஹல்கட பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)