பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பலவகைச் செய்தித் துணுக்குகள்

சந்நிதியான் தேர்திருவிழாவில தங்க நகைகள் திருட்டு!
(எஸ் தில்லைநாதன்)

தொண்னடமானாறு செல்வ சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

ஆலய தேர் திருவிழா நேற்று (30) புதன்கிழமை நடைபெற்றது. அதன்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வேளையில், சன கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தோரின் நகைகளை திருடி உள்ளனர்.

நகை திருட்டுக்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. முறைப்பாட்டின் பிரகாரம் சுமார் 25 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப் பொருள் கடத்தல் - ஐந்து சந்தேகநபர்கள் கைது!

(எஸ் தில்லைநாதன்)

போதைப் பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு செல்வதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உரும்பிராயில் கடந்த இரண்டு நாட்களாக படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைதானவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஒன்றரை கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவர் குருநகரில் கைது

(எஸ் தில்லைநாதன்)

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார்.

போயா தினமான நேற்று (30) புதன்கிழமை மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 போத்தல் சாராயம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபரும், சாராய போத்தல்களும் மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)