பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு!

(எஸ் தில்லைநாதன்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது.

தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச் செல்வதினால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது.

ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண், பெண் இரு பாலாரும் எவ்வித பிரச்சினையுமின்றி இரத்ததானம் செய்யலாம் என வைத்தியசாவை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஏற்கனவே இரத்த தானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நிலவும் குருதித் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும், புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தங்கள் ஊர்களிலும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தால் தாம் வருகை தந்து குருதியை சேகரிக்கும் பணிகளை முன்னெடுப்போம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், 0772105375 அல்லது 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

கும்பாபிசேகம்

(எஸ் தில்லைநாதன்)

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் நேற்று (23) புதன் காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயக பெருமான் வீதி வலம் வந்தார்.

அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்வு இடம்பெற்று, பிரதான கும்பங்கள் வீதி வலம் வந்து பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.

இக் கும்பாபிஷேக பெருவிழாவில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

கிளிநொச்சி வைத்தியசாலையில் அடையாள வேலை நிறுத்தம்

(எஸ் தில்லைநாதன்)

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (24) வியாழன் அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது.
இதன்படி கிளிநொச்சி வைத்தியசாலையிலும் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

07 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவப் பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.

இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு வேலைநிறுத்தம் நடைபெற்றது.

நித்திரைக்கு சென்றவர் மறுநாள் சடலமாக மீட்பு

(எஸ் தில்லைநாதன்)

உணவருந்தி விட்டு படுக்கைக்கு சென்ற இளைஞர் செவ்வாய் (22) காலை சடலமாக மீட்கப்பட்டார். போதை மருந்து பாவனையே இவரின் மரணத்துக்கு காரணமா? என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - கொட்டடியை சேர்ந்த 30 வயது இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் யாழ். நகரில் வர்த்தகநிலையம் ஒன்றில் பணியாற்றுகிறார் என்றும் தெரிய வருகின்றது.

இவர் ஊசி மூலம் போதைப் பொருளை உள்ளெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்

(எஸ் தில்லைநாதன்)

மன்னார்- தலைமன்னார் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

தலைமன்னாரில் இருந்து ஊர்மனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஊர்மனையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு!

(எஸ் தில்லைநாதன்)

ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று செவ்வாய் கிழமை (22) உயிரிழந்தது.

குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக அங்கிருந்து பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை உயிரிழந்தது. நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மதிவதனன் சுதர்சாவிந் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)