
posted 21st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நிந்தவூரில் இரத்தான முகாம்
நிந்தவூர் கடற்கரை பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளிவாசலின் 36 வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.
பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளிவாசல் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாசல் பேஸ் இமாம் அல்-ஹாபில் மௌலவி ஏ.பீ.எம். சிம்லி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
குறிப்பாக பிரதேச விளையாட்டுக் கழக வீரர்கள் சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்பு படையினர் உலமாக்கல் அரச உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நாட்டில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவினை வாழ வைப்பது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
எனவே, புனிதமான இந்த இரத்ததான நன்கொடையில் கலந்து கொண்டு தமது உதிரத்தினை வழங்கி உதவிய சகலருக்கும் பேஸ் இமாம் அல் ஹாபிழ் சிம்லி நன்றி தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)