
posted 23rd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
திருமலை சித்த மருத்துவ பீடம்
திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு திருமலை வளாக சித்த மருத்துவ பீடத்தில் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் ச. தேவதாசன், கிழக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர் திருமதி ஜே. ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ. சிறீதர், சித்த மருத்துவ பீட பதில் பீடாதிபதி பேராசிரியர் சோ. சுதர்சன் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சித்த மருத்துவத்தின் தந்தையாக இருக்கின்ற அகத்திய முனிவரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, சர்வமத அனுஷ்டானங்களுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)