
posted 15th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஜப்பானிய நிதியுதவியில் உரம் விநியோகம்!
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று (15) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஊடக வவுனியா மாவட்டத்தில் 9028 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் 25 கிலோகிராம் கொண்ட 13, 375 யூரியா பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)