
posted 16th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை வர்த்தக நிலையங்களில் களப்பரிசோதனை முன்னெடுப்பு
கல்முனை மாநகர சபையின் வருமான வாரத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்கள்மீதான களப் பரிசோதனை நடவடிக்கை நேற்று முன்தினம் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ்வின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்தக் களப் பரிசோதனை நடவடிக்கையில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, பிரதம சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் அர்ஷாத் காரியப்பர், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், வருமான பரிசோதகர்களான ஏ.ஜே. சமீம், எம். உபைதுல்லாஹ், எம்.எம். ரைஹான், சுகாதார பரிசோதகர்களான ஜே.எம். நிஸ்தார், எம்.எம். பாறுக், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான நாகரத்தினம், எம்.சி.எம். நுஸ்ரத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது வர்த்தக நிலையங்களில் வியாபார அனுமதிப் பத்திரம் பரீட்சிக்கப்பட்டு, இதுவரை இந்த ஆண்டுக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றிராத வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அந்தப் பத்திரத்தை அவர்கள் இலகுவாக பெற்றுக் கொள்வதற்காக அதே இடத்தில் ஆரம்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்களும் இதன்போது பரிசோதிக்கப்பட்டு, தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)