
posted 29th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கலைக் கதம்பம் நிகழ்வு
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபை ஆகியன இணைந்து வழங்கிய கலைஞர்களின் கலைக் கதம்பம் நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்சான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சுரேஷ்குமார், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ. ஜப்பார், முன்னாள் அதிபர் எம்.எம். இஸ்மாயில், எம்.சீ.ஏ. மாஹிர், நிந்தவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப், சிரேஷ்ட கவிஞர் கே.எம்.ஏ. அஸீஸ், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கவிதாயினி சுஹைல் அஸீஸ் மற்றும் சாய்ந்தமருதில் செயற்படுகின்ற பிரதான கலைமன்றங்களான முஹம்மதிய்யா கலை மன்றம், தக்வா கோலாட்டக் குழு, மருதம் கலைக்கூடல் மன்றம், நியூ வெண்ணிலா இசைக்குழு ஆகிய கலை மன்றங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட மூத்த கலைஞர்கள், மன்ற உறுப்பினர்கள், பொல்லடிக் கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன்போது மூத்த கலைஞர்களின் திறமைகள் மேடையேற்றப்பட்டு, நான்கு கலைமன்றங்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.
அத்துடன் முஹம்மதிய்யா கலைமன்றம் மற்றும் தக்வா கோலாட்டக்குழு மாணவர்களின் கோலாட்டம் எனப்படும் பொல்லடி நிகழ்வு மேடையில் அரங்கேற்றப்பட்டதோடு, அதில் பங்குபற்றிய அனைத்து மாணவர்கள் மற்றும் அண்ணாவிமார்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மருதம் கலைக்கூடல் மன்றக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் சபையோரால் பாராட்டி சிலாகித்து பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)