
posted 25th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
உணவகங்களில் திடீர் சோதனை
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றயீஸ் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு உணவகங்களில் திடீர் சோதனை இடம்பெற்றது.
தற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களின் தரத்தைப் பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் உணவகங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலும், இதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நீரில் கழுவாமல் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் சீர்குலைந்து காணப்பட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணெய்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)