
posted 30th August 2022
வன்னியூர் ரஜீவனின்"கன்னத்தின் காயங்கள்" சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28) காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய முதல்வர் எஸ். நாகேந்திர ராசா தலைமையில் இடம்பெற்றது.
சிறுகதை தொகுப்பினை நூலாசிரியரின் பெற்றோர் வெளியிட்டு வைத்தனர். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
.
குறித்த நிகழ்வில், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், இலக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)