விதந்துபாராட்டத்தக்கது

“சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கி சகலரும் சமத்துவமாக வாழ்தவதற்கு மக்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை கரித்தாஸ் எஹெட் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியான பணிகள் விதந்து பாராட்டத்தக்கவையாகும்”
இவ்வாறு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் கூறினார்.

கரிதாஸ் - எஹெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள இரு பாடசாலைகளைச் சேர்ந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பிரதேசத்திலுள்ள ஐந்து சிறு நீரக நோயாளர்களுக்கு நிதி உதவியும் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதேச செயலாளர் அப்துல்லத்தீப் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதேச செயலக சமூக சேவைத் திணைக்களப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முர்ஷித் தலைமைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் எஹெட் நிறுவன அம்பாறை மாவட்ட திட்ட இணைப்பாளர் எம்.ஜி. நியூட்டன் கௌரவ அதிதியாகவும், திட்டமிடல் பணிப்பாளர். ஏ.எம். சுல்பிகார் நிருவாக உத்தியோகத்தர் எம்.ரீ.எம். சரீம், சிரேஷ்ட கிராம சேவை உத்தியோகத்தர் எம். பைரூஸ் ஆகியோகர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் அவலம், உட்பட இன்றைய நிலையில் மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகள், விலையேற்றங்களால் பெரும் கஷ்ட நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வறுமைக்கோட்டின் கீழ்வழும் மக்கள் இத்தகைய நிலமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள் நீங்கி, கஷ்ட நிலமைகளுக்கு நிவாரணம் பெற்று சமத்துவமாக வாழ்வதற்கு மக்களை வலுப்படுத்தும் செயற் திட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.

இந்த வகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களுக்கு கரித்தாஸ் எஹெட் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் விதந்து பாராட்டத்தக்கவையாகவுள்ளன.

குறிப்பாக சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது களத்தில் நின்று கரித்தாஸ் எஹெட் நிறுவனம் ஆற்றிய பணிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டங்கள் மற்றும் முன்னெடுத்த நிவாரணப் பணிகளை ஒரு போதும் மறந்து விட முடியாது.

இந்த வகையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட மக்களுக்காக கரித்தாஸ் - எஹெட் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அரும்பெரும் சேவைகள் நன்றியுடன் நோக்கப்பட வேண்டியவையாகும்.

இப்பணியை இனமத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமான உணர்வுகளுடன் நெறிப்படுத்திவரும் கரித்தாஸ் எஹெட் இயக்குநர் அருட்பணி ஏ. ஜேசுதாஸன் அவர்களுக்கு எமது மக்கள் சார்பில் நன்றி பகர கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

விதந்துபாராட்டத்தக்கது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY