
posted 20th August 2022
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் வெற்றிடமாகவுள்ள நான்கு கல்வி வலயங்களுக்கு விரைவில் நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கென வெற்றிடமாகவுள்ள நான்கு வலயங்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளை நிரப்புவதற்கு தற்சமயம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மத்திய வலயங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, மற்றும் திருக்கோவில் வலயங்களுக்குமே மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை கல்வி நிருவாக சேவையில் தரம் ஒன்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இதற்கென விண்ணப்பிக்கலாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி எதிர்வரும் 12.09.2022 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவத்திணை கிழக்கு மாகாண சபையின் இணையத்தளத்தில் பிரவேசித்து கல்வி அமைச்சு எனும் பக்கத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ள முடியுமென கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ.ஜி. திஸநாயக்க தெரிவித்துள்ளார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY