
posted 1st September 2022
குறிப்பாக நகர் பகுதிகள், வீதியோரங்கள், ரயில் பாதைகளுக்கு அருகில், விவசாய நிலங்கள் என பல இடங்களில் இவை ஆக்கிரமித்துள்ளன.
விவசாயத்துறைக்கு அதிகளவில் கேடு விளைவிக்கும் தாவரமாக பார்த்தீனியம் களை காணப்படுகின்றது.
விவசாயப் பயிர்களை ஆக்கிரமித்து, அழித்து வளரக்கூடிய தன்மையுள்ளமையால், இந்த களை பரவும் இடத்தில் பயிர்ச்செய்கை பண்ணமுடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, பார்த்தீனியக் களை பரவுவதைத் தடுப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அச் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படாமையினாலேயே தற்போது இந்நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)