வல்வைப் படுகொலையின் நினைவேந்தல்

வல்வைப் படுகொலையின் நினைவேந்தல் வல்வெட்டித்துறை றேவடி கடற்கரைப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்
அனுஷ்டிக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தினரால் 1989 ஓகஸ்ட் வல்வெட்டித் துறையில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 33ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று முன் தினம் நினைவுகூரப்பட்டது.

இதன்போது 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின்
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வல்வைப் படுகொலையின் நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)