வரலாற்று ஆளுமைகள்

கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் எழுதியுள்ள “நமது வரலாற்று ஆளுமைகள்” எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பில் சிறப்புற இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் திகழ்ந்த புத்தி ஜீவிகள், ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள், வைத்தியத்துறை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள், மற்றும் பல்துறை சார்ந்தோரை வகைப்படுத்தி ஆளுமைகளாக வெளிப்படுத்தும் வகையில் இந்த நூல் வெளியிடப்பட்டிருந்தது.

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன்,

பல முக்கிய பிரமுகர்களும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர். தலைவர் ரவூப் ஹக்கீம் விழாவில் உரையாற்றுகையில் நூலாசிரியர் ஸக்கியா சித்தீக் பரீட்டின் ஆளுமை மிக்க முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார்.

தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இந்த நாட்டில் உள்ளுர் யுத்தம் முடிவுக்கு வந்த பின் ஒரு எதிரியை ஒழித்துவிட்டோமென சிங்கள சமூகத்தின் மத்தியில் மார்தட்டிய ராஜபக்ஷக்கள் மற்றொரு எதிரியாக முஸ்லிம் சமூகத்தை சிங்கள சமூகத்திடம் காட்டுவதற்கு வரித்துக் கொண்டு நடத்திய அநியாயங்கள் முஸ்லிம் சமூகத்தைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக கொவிட் - 19 பரவல் காரணமாக மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தராமல் பலவந்தமாக எரித்த விவகாரம் உச்சகட்டமாக முஸ்லிம்களைப் புண்படுத்திவிட்ட மனிதபிமானமற்ற அரக்கசெயலாகும்.

இந்த ஜனாஸா எரிப்பைத் தவிர்க்குமாறு பல முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களும் ஒருமித்து அனுப்பிய கடிதத்திற்குக் கூட பதில் வழங்காது குப்பை தொட்டியில் போட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டா இன்று மிகப் பெரும் இழிவுக்கு உட்பட்ட நிலமை ஏற்பட்டுள்ளது.

எனினும் முஸ்லிம் சமூகத்தின் மீதான அநியாயங்கள் இன்னும் குறைந்தபாடில்லை” என்றார்.

மேலும் நிகழ்வின் போது தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் ஆகியோர், யாழ்ப்பானத்தைச் சேர்ந்த சிரேஷ்ட எழுத்தாளர் கலாபூஷணம் பரீட் இக்பாலினால் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.

வரலாற்று ஆளுமைகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY