
posted 28th August 2022
வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையில் இருந்து பரந்தன் நோக்கி சென்ற காரும், திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சீமெந்து ஏற்றி வந்த லொறியும் வாகரைப் பிரதேசத்தில் வியாழக்கிழமை (25) இரவு 11.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிய நிலையில் காரில் பயணித்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் கல்முனை அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த எம். பார்வதி (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.
லண்டனின் இருந்து வந்த குடும்பத்தினர் தனது கல்முனையில் உள்ள தனது தாயின் வீட்டில் இருந்து தனது கணவரின் உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் பரந்தனை நோக்கி சென்ற வேளை வாகரை பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY