வட மாகாணத்தில் காணிப் பிரச்னைகளுக்கு வழிகாட்டும்'மெசிடோ' நிறுவனம்  - யட்சன் பிகிராடோ

காணி தொடர்பான பல பிரச்சனைகள் வட மாகாணத்தில் இருப்பதனால், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய தீர்வை சட்ட ரீதியாக எவ்வாறு பெற முடியும் என்பதற்குரிய ஆலோசனையை வழங்குவதற்காக சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமானது (மெசிடோ' நிறுவனம்) இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதுதென அதன் தலைவர் யட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிறுவனத்தினால் வட மாகாண காணி அபகரிக்கப்பட்ட குரல் என்ற கருத்தினை மையமாக வைத்து கருத்தமர்வு ஒன்று யட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது.

செவ்வாய் கிழமை (23.08.2022) காலை பத்து மணி தொடக்கம் மாலை நான்கு மணிவரை நடைபெற்ற இக் கருத்தமர்வில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் மாவட்டத்திற்குப் பத்து பேர் வீதம் ஐம்பது பேர் இவ் அமர்வில் கலந்து கொண்டனர்.

இவர்களின் காணி தொடர்பாக சட்ட ஆலோசனை வளவாளராக மன்னார் மாவட்டத்தில் சிறந்த வழக்கறிஞர்களாக திகழும் சட்டத்தரனி எஸ். டினேஸ், சட்டத்தரனி திருமதி எஸ். புராதினி மற்றும் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தரனி மோ. பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு காணி தொடர்பான சட்ட திட்டங்களை தெளிவுப்படுத்தினர்.

இக் கூட்டத்தில் யட்சன் பிகிராடோ கருத்து தெரிவிக்கையில்;

வடக்கு மாகாணத்தில் மக்களுது காணிகள் தனியார் அல்லது அரச காணிகளாகக் கூட இருக்கலாம் காணிப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, தீர்வின்றி தவிப்பது கண்கூடு. எனவே, நாம் அனைவரும் ஒன்றாக்ச் செயல்பட்டு இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்

எனவே, இக் காணிப் பிரச்சனைகள் சட்ட ரீதியாகவும் இருக்கலாம் அல்லது பரிந்துரையாகவும் அமையலாம் அல்லது நீதி மன்றத்தை நாடியும் செயல்படலாம். அத்துடன் அரச அதிகாரிகளுடனான சந்திப்புக்கள் கலந்துரையாடல் பரிந்துரையாடல் மூலமாகவும் இவ்வாறு பல வடிவங்களில் நாம் இழந்த காணிகளை மீட்டெடுக்க வழிகள் இருக்கின்றன.

ஆகவே முதலில் நீங்கள் உங்களுக்கு தரப்பட்டு படிவங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில் உங்கள் மாவட்டங்களில் உள்ள குழுக்களூடாக உங்கள் பகுதியிலுள்ள எங்கள் சக நிறுவனத்துக் கூடாகவும் சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் பெற்று நாம் உங்கள் காணிப் பிரச்சனைகள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.

வட மாகாணத்தில் காணிப் பிரச்னைகளுக்கு வழிகாட்டும்'மெசிடோ' நிறுவனம்  - யட்சன் பிகிராடோ

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)