
posted 1st August 2022
அதிபர் காரியாலயத்துக்கான கட்டடம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த நிலையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. காரியாலயத்தை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதிபருக்கான காரியாலயம் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாக பாடசாலையின் அதிபர் ஆர். செந்தில்நாதன் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் அது தமிழர் தரப்புக்கான தீர்வை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும். குறித்த அரசாங்கத்தில் அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற வேளையில் தமிழர்களின் பிரச்னை தொடர்பில் பேசப்பட்டு அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
சிங்களத் தரப்புக்களிடமிருந்து நாம் ஏமாறியதைக் காட்டிலும் தமிழ் தரப்பினரிடமிருந்து ஏமாந்தமையே அதிகமாக உள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)