
posted 17th August 2022
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், மாத்திரைகள் விற்பனை செய்த பணம் என்வற்றுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், போதை மாத்திரை விற்பனை செய்தார், எனும் குற்றசாட்டில் 23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவரது உடமையில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரை, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றை மீட்டனர்.
அதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY