
posted 16th August 2022
மன்னார் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் உள்ள பேசாலை கடற்தொழில் பிரிவிலுள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன்வாடிகள் தீக்கிரையாகியுள்ளதுடன் பெருமதிமிக்க மீன்பிடி உபகரணங்களும் தீயில் நாசமாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவரவதாவது;
ஞாயிற்றுக்கிழமை (14.08.2022) இரவு பேசாலை கடற்தொழில் பிரிவிலுள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று மீன் வாடிகளும் அதற்குள் இருந்த பல ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க கடற்தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி ஊள்ளன.
இவ் வாடிகளுக்குள் இருந்த 25 குதிரை வலு கொண்ட மூன்று வெளிக்கள இயந்திரங்களும் மற்றும் பெறுமதி மிக்க மீன்பிடி மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களளும் தீயினால் முற்று முழுதாக நாசமாகியுள்ளதாக பேசாலை பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இத் தீ வைப்பு நாசகார சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது எனவும் பாதிப்படைந்தோர் பொலிசில் முறையீடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)