
posted 28th August 2022
நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேற்பட்ட நீண்ட கியூ வரிசைகள் புதிய கியூஆர் முறையால் தணிந்திருந்த போதிலும், மீண்டும் இந்த கியூ வரிசை யுகம் ஆரம்பமாகின்றதா என்று கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் மீண்டும் நீண்ட கியூவரிசைகளில் முண்டியடித்தவண்ணம் நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீஸல், பெற்றோல் எரிபொருட்கள் கையிருப்பு இல்லையெனவும், இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய தனியாள் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்த தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலமைகள் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட கியூ வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கியூ வரிசை யுகத்திற்கு நிரந்தர விடிவுகள் தான் இல்லையா என மக்கள் அங்கலாய்க்கவும் தொடங்கியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY