மலையகப் பகுதியில் பெய்து வந்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

கடந்த ஒரு வாரமாக மலையகப் பகுதியில் பெய்து வந்த கடுமத் மழை காரணமாக அப் பகுதிகள் பெரும் வெள்ளக்காடுகளாக காட்சி அளித்ததுடன் அப் பகுதி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவித்த சம்பங்களும் இடம்பெற்றது.

இவ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்ததை கவனத்தில் எடுத்துக்கொண்ட செஞ்சிலுவை சங்கம் வட்டவளை பிரதேசத்தில் பாதிக்கபட்ட 66 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உளர் உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் ஊடாக சனிக்கிழமை (06.08.2022) வழங்க பட்டன.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செஞ்சிலுவை சங்க பணிப்பாளர் சமன் சந்திரசிறி மற்றும் வட்டவளை பிரதேச கிராம உத்தியோகத்தர் மிட்லன் பெரேரா வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்க பட்டவர்களுக்கு இவ் பொருட்களை வழங்கினர்.
இத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று காரணமாக அதற்கான கிரிமிநாசினிகளும் வழங்க பட்டது குறிப்பிடத்தக்கது.

மலையகப் பகுதியில் பெய்து வந்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY